கார்த்தி இப்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களில் முதலில் ஜப்பான் படமும், அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கும் படமும் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.
இதில் நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் சில பேண்டசி அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ளதாகவும், அவருக்குள் எம் ஜி ஆர் வந்துவிடுவது போன்ற சில பேண்டசி அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாம்.
இந்த படத்தில் சத்யராஜ் ஒரு முக்கியமான வேடத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அவர்தான் படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு சத்யராஜ் வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.