Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி...

Advertiesment
காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி...
, புதன், 16 ஆகஸ்ட் 2023 (15:59 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த பத்தாம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற காவாலா என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தமன்னாவின் அற்புதமான நடனத்தில் உண்டான இந்த பாடல் இணையதளத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை விருப்பத்திற்குரிய பாடலாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில்  காவாலா படத்திற்கு  ஜப்பான் நாட்டின் தூதர் ஹிரோஷி சுசுகி என்பவர் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  
 
ஏற்கனவே காவாலா  பாடலுக்கு நம்மூரில் சிறுவர் முதல் பெரியவர் வரைபளரும் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது என்பதும் அதேபோல் திரை உலக நட்சத்திரங்கள் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் நடமாடிய நிலையில் தற்போது ஜப்பான் நாட்டின் தூதரே நடனம் ஆடியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் யாரு என்று கேட்ட அமைச்சர் துரைமுருகன்.. வச்சு செய்யும் அஜித் ரசிகர்கள்.