சந்தியன் அந்திக்காடு படத்தில் துல்கர் சல்மானுடன் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
சந்தியன் அந்திக்காடு படத்தில் துல்கர் சல்மானுடன் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
, வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (18:36 IST)
ஐஸ்வர்யா ராஜேஷ் சித்தார்த்த சிவா இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் மலையாளப் படத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் சத்தியன் அந்திக்காடின் புதிய படத்தில் துல்கர் சல்மானுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
இந்தப் படத்தில் பாதி மலையாளியாகவும், பாதி தமிழ் பெண்ணாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் எடுக்க உள்ளனர். திருப்பூர் டெக்ஸ்டைல் வியாபாரம் படத்தின் பின்னணியில் வருகிறது.
படத்தின் ஸ்கிரிப்ட் பிடித்திருந்ததாகவும், படத்தை இயக்குவது சத்தியன் அந்திக்காடு என்றதும் நடிக்க உடனே ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.