Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உருவாகும் சூதுகவ்வும் 2 ? விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சத்யராஜ்!

உருவாகும் சூதுகவ்வும் 2 ? விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
, திங்கள், 28 டிசம்பர் 2020 (18:35 IST)
நடிகர் சத்யராஜ் நடிப்பில் சூதுகவ்வும் 2 திரைப்படம் தற்போது உருவாக்கத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களின் வெற்றியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்த விஜய் சேதுபதியை ஹீரோவாக மாற்றியப் படம் சூதுகவ்வும். தமிழில் பிளாக் காமடி வகைப் படங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இன்றுவரை திகழ்ந்து வருகிறது அந்தப் படம்.

சூதுகவ்வும் படத்துக்குப் பிறகு நலன் குமாரசாமி இயக்கிய காதலும் கடந்துபோகும் திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியாகியது. அதன் பின் எந்த படமும் இயக்காமல் இருக்கும் நலன் இப்போது சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைகதையை எழுதி வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இப்போது சூதுகவ்வும் படத்தின் பார்ட் 2 உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கவில்லை. சிவி குமரன் தயாரிக்கும் இந்த படத்தை யங் மங் சங் படத்தின் இயக்குனர் அர்ஜுன் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் இந்த முறை சத்யராஜ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’பாகுபலி ’’ஹீரோபோல் இந்திய ஹீரோவாகும் ’’ மாஸ்டர் விஜய்’’ !!!