Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரீமேக் படத்தில் பவர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்த சமுத்திரக்கனி – டெரர் கதாபாத்திரத்தில்!

ரீமேக் படத்தில் பவர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்த சமுத்திரக்கனி – டெரர் கதாபாத்திரத்தில்!
, செவ்வாய், 22 டிசம்பர் 2020 (16:57 IST)
அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்க உள்ளார்.

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

இந்த படத்தின் ரீமேக்கில் இப்போது பவன் கல்யாணும் ராணாவும் நடிக்க உள்ளனர். மேலும் முக்கியக் கதாபாத்திரங்களில் சாய் பல்லவியும், ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்க உள்ளனர். இதையடுத்து ராணாவை தூண்டிவிட்டு கோபப்படுத்தும் தந்தைக் கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் அவர் நடித்த அலா வைகுந்தபுரம்லூ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புத்தாண்டுக்கு வருது வலிமை அப்டேட்!? – யுவன் கசியவிட்ட ரகசியம்