Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

vinoth
புதன், 28 மே 2025 (14:27 IST)
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘குட்னைட்’ மற்றும் ‘லவ்வர்’ ஆகிய படங்களுக்கு அடுத்தப் படமாக ’டூரிஸ்ட் பேமிலி’ படம் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸானது. படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்க, சிம்ரன், யோகி பாபு மற்றும் சசிகுமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

இந்த படத்துக்கு ரிலீஸுக்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. படம் ரிலீஸாகி ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்த நிலையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து கலக்கி வருகிறது. இந்த படம் ரிலீஸாகி 27 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னமும் கணிசமான வசூலைத் தக்கவைத்துள்ளது.

இதுவரை உலகளவில் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் உள்ளிட்ட பல தமிழ் திரைப்பட பிரபலங்களில் படத்தைப் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் படம் இப்போதும் சில திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில் ஜூன் 2 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

தொடர்ந்து செய்த தவறு… இம்பேக்ட் பிளேயருக்கும் சேர்த்து அபராதம்!

'தக்லைஃப்’ பேனரை கிழித்து ஆர்ப்பாட்டம்.. கன்னட அமைப்புகளால் படத்திற்கு தடையா?

சின்மயி வெர்ஷனா.. தீ வெர்ஷனா?... எது சிறப்பு?- தக் லைஃப் படத்தின் முத்த மழைப் பாடல் குறித்து ரசிகர்கள் விவாதம்!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்துக்கு இரண்டு டைட்டில்கள் பரிசீலணை!

அடுத்த கட்டுரையில்
Show comments