நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை. ஏற்கனவே ஒத்துக்கொண்ட படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இப்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஒய்நாட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் சித்தார்த் மற்றும் மாதவன் ஆகியோருடன் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்துக்கு டெஸ்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்ததும் கிரிக்கெட் மைதானங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.