Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா 75 படத்தின் முதல் நாள் ஷூட்டிங்… கலந்துகொண்டு வாழ்த்திய சூப்பர் ஸ்டார்!

நயன்தாரா 75 படத்தின் முதல் நாள் ஷூட்டிங்… கலந்துகொண்டு வாழ்த்திய சூப்பர் ஸ்டார்!
, திங்கள், 10 ஏப்ரல் 2023 (15:06 IST)
திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதையடுத்து அவர் அட்லி இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாகவே நயன்தாரா 75 என்ற அறிவிப்போடு ஒரு படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த கட்ட பணிகள் நடக்காமல் இழுத்தடித்துகொண்டு இருந்தன.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் பூஜையோடு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படத்தில் நயன்தாராவோடு ஜெய், சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்க உள்ளார். படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் முதல் நாள் படக்குழுவினரை சந்தித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யோகி பாபுவுக்காக காத்திருக்கும் கே எஸ் ரவிக்குமார்.. இது என்னடா மாஸ் இயக்குனருக்கு வந்த சோதனை!