எப்படியோ இன்று வருணுக்கு பைசல் பண்ணி விட்டதால் ஒரு வழியாக சர்கார் படத்தின் தலைக்கு வந்த பிரச்சனை தலைப்பாகையோடு போனது.
இதனால் இயக்குநர் முருகதாஸ் சிறிது நிம்மதியடைந்திருப்பார். ஆனால் மீண்டும் அடுத்த சர்ச்சையாக கத்தி படத்தின் கதை தன்னுடையது என நீண்ட காலமாக போராடி வருபவர் குறும்பட இயக்குநர் ராஜசேகர் ஆவார்.
இவர் கத்தி படத்தின் கதையை 2013ஆம் ஆண்டில் முருகதாஸுக்கு அனுப்பி வைத்ததாகவும் அதை முருகதாஸ் தன்னுடையதாக மாற்றி படம் எடுத்ததாகவும் காப்புரிமைச் சட்டத்தில் படி தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அது இன்னும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று இயக்குநர் வருக்கு கிடைத்த நியாயத்தை போல தனக்கும் நியாயம் கிடைக்கும் வரை போராடப்போவதாக அறிவித்துள்ளார்.
அவர் இன்று மாலை கூறியுள்ளதாவது:
கத்தி படத்தின் கதையை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முருகதாஸிடம் உதவி இயக்குநராக ஆகும் பொருட்டு அவருடைய டிவிட்டர் பக்கதில் அனுப்பி வைத்தேன் .அதன் பின் அந்த கதையை அவர் கத்தி படமாக எடுத்து விட்டார். இதனால் நான் பாதிக்கப்பட்டுளேன். காப்பிரிமைச் சட்டத்தின் படி வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆனால் இன்னும் கிடைத்த பாடில்லை. இந்நிலையில் எனக்கு நியாயம் கிடைக்கும் வரை என்னுடைய குடும்பத்துடன் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணா விரதம் இருக்க போகிறேன். இவ்வாறு அவர் வேதனையுடன் தெரிவித்தார்.