Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்தார் 2 ரிலீஸ் எப்போது?... கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

சர்தார் 2 ரிலீஸ் எப்போது?... கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

vinoth

, செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (15:50 IST)
கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார்.  இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. கார்த்தியின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

இதனால் இப்போது சர்தார் 2 படம் தொடங்கியுள்ளது. படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்துக்காக 1970 களில் பயன்பாட்டில் இருந்த விமானம் ஒன்று சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்துக்குள் பல முக்கியமானக் காட்சிகளை இயக்குனர் படமாக்கவுள்ளாராம். படம் வெளியாகும் போது இதில் படமாக்கப்படும் காட்சிகள் பேசுபொருளாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

இந்த படத்தின் டீசர் ஒன்று படமாக்கப்பட்டு இன்னும் ரிலீஸாகாமல் உள்ளது. இந்நிலையில் இந்த டீசர் கார்த்தியின் மெய்யழகன் திரைப்படத்தோடு திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளதாம். இதனால் மெய்யழகன் பார்க்கப் போகும் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையவுள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரியங்கா VS மணிமேகலை பிரச்சனைக்கு சுஜிதா காரணமா.? பகீர் கிளப்பும் அதிர்ச்சி வீடியோ.!!