Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐந்து மொழிகளில் வெளியாகும் அண்ணாச்சி படம்!

ஐந்து மொழிகளில் வெளியாகும் அண்ணாச்சி படம்!
, திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (16:37 IST)
சரவணா ஸ்டொர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்சரவணனுக்கு திடீரென ஹீரோ ஆசை ஏற்படவே தனது நிறுவன விளம்பரங்களில் தானே நடிக்க ஆரம்பித்தார். அதனால் பலர் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். ஆனாலும் விடாது எல்லா விளம்பரங்களிலும் அவரே நடித்தார். இதையடுத்து தன்னை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் முயற்சியாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்த படத்தை அவரை வைத்து விளம்பரப் படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். இசைக்கு ஹேரிஸ் ஜெயராஜ், பாடலுக்கு வைரமுத்து என முன்னணிக் கலைஞர்களை படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் அண்ணாச்சி.

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடந்து வரும் நிலையில் படத்தை ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதை அந்த படத்தின் நாயகியே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லூசிபரில் சல்மான் கானை இழுக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம்!