Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவனத்தை ஈர்த்த சாந்தி சௌந்தர்ராஜன் பட போஸ்டர்!

கவனத்தை ஈர்த்த சாந்தி சௌந்தர்ராஜன் பட போஸ்டர்!
, திங்கள், 15 மார்ச் 2021 (17:43 IST)
தடகள வீராங்கனை சாந்தியின் வாழ்க்கையை ஓட்டி உருவாக்கப்படும் சாந்தி சௌந்தர்ராஜன் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி என்ற தடகள வீராங்கனை சர்வதேச அளவிலான போட்டிகளில் 11 பதக்கங்களையும், தேசிய அளவிலான போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.

ஆனால் அவருக்கு பாலியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவரிடம் இருந்து பதக்கங்கள் யாவும் பறிக்கப்பட்டன. மேலும் தான் பெண் என்று நிருபிக்க 9 ஆண் மருத்துவர்கள் அடங்கிய குழுவின் முன்னர் அவர் நிர்வாணமாக்க்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுவரை அவருக்கான நீதிக் கிடைக்கப்படவே இல்லை. இந்நிலையில் இப்போது அவரின் போராட்ட வாழ்வை மையமாக வைத்து சாந்தி சௌந்தர்ராஜன் என்ற படத்தை இயக்குனர் ஜெயசீலன் இயக்க உள்ளார். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, ரசுல் பூக்குட்டி ஒலிப்பதிவு செய்ய உள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனது பிறந்தாளில் சூப்பர் ஸ்டார் எடுத்த அதிரடி முடிவு...ரசிகர்கள் அதிர்ச்சி