Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திக்குவாய் கதாபாத்திரத்தில் சந்தானம் – புதுப்படத்தில் வித்தியாசமான கேரக்டர்!

திக்குவாய் கதாபாத்திரத்தில் சந்தானம் – புதுப்படத்தில் வித்தியாசமான கேரக்டர்!
, புதன், 16 டிசம்பர் 2020 (16:02 IST)
நடிகர் சந்தானம் அடுத்து தான் நடிக்கும் படத்தில் திக்குவாய் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

காமெடி நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து இப்போது வரை அதில் தாக்குப் பிடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடித்த சில படங்கள் நல்ல வெற்றியைப் பெற்று வருகின்றன. இதையடுத்து அவர் ஏ 1 படத்தின் இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து அவர் சபாபதி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது கும்பகோணம் பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சந்தானம் இதுவரை தான் ஏற்காத திக்குவாய் பிரச்சனை கொண்ட நபராக நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பா ரஞ்சித் & ஆர்யா படப்பிடிப்பு நிறைவு – படக்குழுவினர் கொண்டாட்டம்!