Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா ரஞ்சித் & ஆர்யா படப்பிடிப்பு நிறைவு – படக்குழுவினர் கொண்டாட்டம்!

பா ரஞ்சித் & ஆர்யா படப்பிடிப்பு நிறைவு – படக்குழுவினர் கொண்டாட்டம்!
, புதன், 16 டிசம்பர் 2020 (15:46 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

காலா படத்தின் வெளியீடு முடிந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு  பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா. இந்த படத்தில் ஆர்யாவோடு துஷாரா, கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் 1980களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்ட இந்த படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் சென்னையில் நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு முடிந்துள்ளது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செம்பருத்தி சீரியல் கார்த்தி கதாபாத்திரத்தில் இனி இவர்தான் – அடித்தது ஜாக்பாட்!