Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்தானம் நடித்த ‘கிக்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

kick
, வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (13:36 IST)
நடிகர் சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடித்திருக்கும் அடுத்த திரைப்படமான ‘கிக்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்று முன் வெளியாகியுள்ளது.  
 
சந்தானம் நடிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவான கிக் என்ற திரைப்படம் ரிலீசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தயாராக இருந்தது. 
 
இந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சந்தானம்  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு புதிய போஸ்ட் மையம் வெளியிட்டுள்ளார்.
 
 ஒரே மாத இடைவெளியில் சந்தனம் நடித்த அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சந்தானம், தன்யா ஹோப்,  தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ராகினி திவேதி ஆகியோர் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜன்யா இசையில், சுதாகர் ராஜ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூனைகளை தூக்கிக் கொஞ்சிய ரைசா வில்சன்.. கடைசியில் நடந்த விபரீதம்!