Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கூகுள்லதான் காமெடிய தேடணும்…” ரசிகர்களை ஏமாற்றிய சந்தானத்தின் ‘குலுகுலு’

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (09:27 IST)
சந்தானம் நடித்துள்ள குலுகுலு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் நடித்த குலுகுலு திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.

மேயாத மான் படத்தின் இயக்குனரும் விக்ரம் படத்தின் வசனகர்த்தாவுமான ரத்னகுமார் இயக்கியுள்ள படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் நேற்று படம் பார்க்க சென்ற ரசிகர்களை மிகப்பெரிய அளவில் படம் ஏமாற்றமடையச் செய்துள்ளது.

படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் “படத்தில் காமெடியை கூகுள்ல போய்தான் தேடணும்” என நெகட்டிவ்வான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். சந்தானத்துக்குக் கடைசியாக ஏ1 என்ற படம் ஹிட்டானது. அதன் பின்னர் வெற்றிப் படம் கொடுக்க முடியாமல் அவர் தடுமாறி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments