நடிகை கீர்த்தி சுரேஷ் அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‘குறும்புக்கார கிராமத்து பெண்ணாக சண்டக்கோழி–2 படத்தில் நடிச்சுருக்கேன். முதலில் இந்த படத்தில் நடிக்க தயக்கம் இருந்துச்சு. ஆனால் டைரக்டர் லிங்குசாமி கதை சொன்னதும், கண்டிப்பாக இதில் நடிக்கணும்ணு முடிவு செஞ்சேன்.
நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் எனது கதாபாத்திரங்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த பொறுப்பை உணர்ந்து கதைகளை தேர்வு செய்கிறேன். கமர்சியல் படங்களில் அதிகமாக நடிக்க ஆசைப்படுறேன். மறைந்த முதல் – அமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நான் நடிக்கப்போவதாக வெளியான தகவல் உண்மையல்ல. இனிமேல் வாழ்க்கை வரலாற்று படங்களில் நடிக்க மாட்டேன்.
காலத்துக்கும் பெயர் சொல்வது மாதிரி சாவித்திரி கதாபாத்திரம் எனக்கு அமைந்து விட்டது. அது போதும் என்று நினைக்கிறேன். விமானநிலையத்தில் முதியவர் ஒருவர் என்னை பார்த்து நீங்கள் சாவித்திரிதானே என்று கேட்டார். அந்த அளவுக்கு எல்லோரையும் அது கவர்ந்து இருக்கிறது.
சண்டக்கோழி 3–ம் பாகம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்' என்றார்.