இயக்குனர் செலவராகவன் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் சாணிக் காயிதம் திரைப்படத்தி நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
இயக்குனர் செல்வராகவனும் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தபோது கொரோனா இரண்டாவது அலை வந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து பின்னர் மீண்டும் தொடங்கி முடிந்துள்ளது.
இப்போது படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஓடிடி வெளியீட்டுக்கு முயற்சி நடக்கிறது என்று சொல்லப்படுகிறது. வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
அதே நாளில் செல்வராகவன் நடித்துள்ள மற்றொரு படமான பீஸ்ட் திரைப்படமும் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.