Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசானில் மஹான் திரைப்படம்!

பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசானில் மஹான் திரைப்படம்!
, திங்கள், 24 ஜனவரி 2022 (15:28 IST)
விக்ரம் மற்றும் துருவ் ஆகியோர் நடித்துள்ள மஹான் திரைப்படம் பிப்ரவரி 10 ஆம் தேதி ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளதாக அமேசான் ப்ரைம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் விக்ரம் நடித்த ‘மஹான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது. இந்நிலையில் புத்தாண்டு அன்று படத்தின் டீசரை வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஆனால் அப்படி எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுபோதையில் பிரியாணி சாப்பிட்ட இயக்குனர் பரிதாப மரணம்!