தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கு நடனம் கற்றுத்தரும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார்.
இந்நிலையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடலுக்கு விஜய் ஸ்டைலில் சாண்டி மாஸ்டர் தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் கால்பந்து கொண்டு செய்யும் மாஸான சாகசங்களை சாண்டி செய்துள்ள வீடியோ விஜய் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.