Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கைதியா..? பிகிலா...? எனக்கு பிடித்த படம் இது தான்!

கைதியா..? பிகிலா...? எனக்கு பிடித்த படம் இது தான்!
, வியாழன், 31 அக்டோபர் 2019 (12:03 IST)
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர்  டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். 


 
விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர்  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக  தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார்.  எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார் டிடி. 
 
சினிமா உலகை பொறுத்தவரையில் திறமைக்கு ஏற்ற அளவுக்கு அழகும் தேவை. அந்த விஷயத்தில் டிடி தன் திறமைக்கு ஏற்றவாறே பார்ப்பதற்கு அழகான முகபாவனையும் கொண்டிருப்பவர். விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி தான். சமீபத்தில் இவருக்கு “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” விருது கொடுத்து பெருமை சேர்த்தனர். 
 
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டிடியிடம், இந்த தீபாவளிக்கு வெளிவந்த படத்தில் எது உங்களுக்கு பிடித்திருந்தது என கேட்க, அதற்கு சட்டென்று  தீபாவளி படங்கள்னாலே அது தளபதி படம் தான். பிகில் போன்றே தீபாவளி தினத்தில் வெளிவந்த துப்பாக்கி  படம் என்னுடைய பேவரைட் என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோல்வியில் முடிந்த முதல் காதல் - காதலியை இன்னும் தேடும் ரஜினிகாந்த்!