கடவுள் எனக்கு வரம் கொடுத்த நாள்... சாண்டி உணர்ச்சிபூர்வ பதிவு!

சனி, 23 மே 2020 (13:41 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கு நடனம் கற்றுத்தரும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார்.

சாண்டி நடிகை காஜல் பசுபதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையேயும் நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக முறையாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதையடுத்து சாண்டி சில்வியா என்ற பெண்ணை மீண்டும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு லாலா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறார்.

லாலா அப்பாவிற்கு ஈடாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது பிரபலமானவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " கடவுள் எனக்கு வரம் கொடுத்த நாள்" என கூறி பிறந்த குழந்தையாக லாலாவை முதன்முறையாக கையில் ஏந்திய அழகிய போட்டோவை பதிவிட்டுள்ளார். லாலாவின் பிறந்தநாளுக்கு இணையவாசிகள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

கடவுள் எனக்கு வரம் கொடுத்த நாள்

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வீட்டில் இருந்தபடியே எடுத்த "கார்த்திக் டயல் செய்த எண்" - மேக்கிங் வீடியோ...!