Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் குடியை விட்டது எப்போ தெரியுமா..? ரஜினிகாந்த் ஓபன் டாக்!

Advertiesment
நான் குடியை விட்டது எப்போ தெரியுமா..? ரஜினிகாந்த் ஓபன் டாக்!
, சனி, 23 மே 2020 (09:08 IST)
தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்திய சினிமா ஜாம்பவான்களின் முக்கிய நபராக பார்க்கப்படுகிறார். இவர் பேருந்து நடத்துனராக பணியாற்றி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்ததையடுத்து நடிகராகும் ஆசையுடன் சென்னைக்கு வந்தார்.

1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்து திரைத்துறையில் கால்பதித்த ரஜினிக்கு திரைவாழ்வின் திருப்புமுனையாக அமைந்த படம் மூன்று முடிச்சு. அதையடுத்து  ‘16 வயதினிலே’, பில்லா, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை போன்ற படங்கள் அதிரடி நாயகனாக அடையாளம் காட்டியது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய திரை வாழ்வை குறித்து பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்த ரஜினியின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு நாள் திடீரென்று இயக்குனர் பாலசந்தரிடம் இருந்து ஒரு காட்சி எடுக்க வேண்டும் வாங்க என்று அழைப்பு வந்தது. ஆனால், அன்று நான் குடித்துவிட்டு இருந்தேன். அதை மறைக்க ஸ்பிரே அடித்துக்கொண்டு போனேன் ஆனாலும் அவர் கண்டுபிடித்துவிட்டார். உள்ளே கூப்பிட்டு  உனக்கு நாசர் தெரியுமா...? அவர் எப்படிப்பட்ட ஆர்டிஸ்ட் அவர் முன்னாடி நீ எல்லாம் ஒரு எறும்புக்கு கூட சமமில்லை. ஆனால் தண்ணி போட்டு அவர் வாழ்க்கை வேஸ்ட் பண்ணிட்டார். நீயும் அதுமாதிரி ஆகிடாதே... இனிமே குடிச்சிட்டு ஷூட்டிங் வர்றது தெரிஞ்சிச்சுன்னா உன்னை செருப்பாலே அடிப்பேன் என்று பாலசந்தர் திட்டினார். அன்று விட்டது தான் இந்த குடி பழக்கம் என ரஜினி பேசியுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சுவாரியரின் கியூட் கிளிக்ஸ்!