உருவாகிறது ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’… ஹீரோ சாண்டி மாஸ்டரா?

vinoth
வெள்ளி, 21 நவம்பர் 2025 (14:25 IST)
ரௌத்திரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். ரௌத்திரம் படம் ஆக்‌ஷன் படமாக இருந்தாலும் அந்த படத்தில் ரசிகர்களைக் கவர்ந்தது அதில் இடம்பெறும் சத்யன் சம்மந்தப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள். அதனால் அதை சரியாகப் பிடித்துக் கொண்ட கோகுல் அடுத்து ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தைக் கொடுத்தார்.

அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பின்னர் கோகுல் நான்கு படங்களுக்கு மேல் இயக்கினாலும் அவரது அடையாளமாக ‘இதற்குதானே…. பாலகுமாரா’ படமே அமைந்துள்ளது. இதையடுத்து அவர் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக சாண்டியை நடிக்கவைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. நடன இயக்குனராக அறியப்பட்ட சாண்டி சமீபத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘லோகா’ படத்தில் வில்லனாக நடித்ததை அடுத்து அவருக்குக் கதாநாயகனாக வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உருவாகிறது ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’… ஹீரோ சாண்டி மாஸ்டரா?

அஞ்சான் ரி ரிலீஸில் சிறு மாற்றம்… புது வெர்ஷனைப் பார்த்த பிரபலங்கள்!

எனக்கு அது மட்டும்தான் பிரச்சனை… மதங்கள் குறித்து ஏ ஆர் ரஹ்மான் கருத்து!

வொர்க் அவுட் ஆனதா டார்க் ஹ்யூமர் ‘ஹெய்ஸ்ட்’ த்ரில்லர்?... ‘மாஸ்க்’ பட விமர்சனம்!

அடடே நம்ம டார்கெட் பிரதீப்பா? தேவையில்லாம தனுஷை சீண்டுறோமே? SKவின் நிலைமையை பாருங்க

அடுத்த கட்டுரையில்
Show comments