பல்லு பறக்கும் சண்டை காட்சிகள் – ட்ரெண்டிங்கில் சந்தானத்தின் “ஏ 1” ட்ரெய்லர்

செவ்வாய், 16 ஜூலை 2019 (19:20 IST)
சந்தானம் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் “ஏ 1” திரைப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சந்தானம் நடித்து ரிலீஸாக இருக்கும் படம் “ஏ 1”. தாரா அலிஷா நாயகியாக நடிக்கும் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் கே.ஜான்சன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

முழுக்க காமெடி ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் தற்போது வெளியானது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள் வாசிக்கும் ஸ்டைலில் ட்ரெய்லரில் அனைவரையும் அறிமுகப்படுத்துவது புது ஸ்டைல். சந்தானத்தின் வசனங்கள் நீண்ட நாட்கள் கழித்து சிரிப்பை வரவழைக்கும்படி உள்ளன. இந்த படம் ஜூலை 26 அன்று ரிலீஸாக இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஆடை அமலா பாலின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..!