Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்ரீரெட்டி புகாரில் சிக்கிய தமிழ்ப்பட இளம் ஹீரோ

Advertiesment
சந்திப் கிஷான்
, திங்கள், 16 ஜூலை 2018 (10:14 IST)
நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் மீது பாலியல் புகார் கூறி வரும் நிலையில் சற்றுமுன் அவர் இயக்குனர் சுந்தர் சி மீதும் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் ஸ்ரீரெட்டியின் லிஸ்ட்டில் இளம் நடிகர் சந்திப்கிஷான் லேட்டஸ்ட்டாக சிக்கியுள்ளார். 'மாநகரம்', 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'மாயவன்' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்த சந்தீப் கிஷான் ஒரு மோசமான நபர் என்பது உள்பட அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளில் ஸ்ரீரெட்டி திட்டி அவர் மீதும் பாலியல் புகாரை பதிவு செய்துள்ளார்.
 
ஏற்கனவே ஆதாரங்கள் இல்லாமல் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி கொண்டே வரும் ஸ்ரீரெட்டி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க விஷால் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஸ்ரீரெட்டியின் பட்டியல் தினந்தோறும் நீண்டுகொண்டே இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரீரெட்டியின் லிஸ்டில் இயக்குநர் சுந்தர்.சி - அதிர்ச்சியில் திரையுலகினர்