Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீரியல் நடிகைகளுக்கு வலை விரித்த விபச்சார புரோக்கர் - சாதுரியமாக சிக்க வைத்த நடிகை

Advertiesment
சீரியல் நடிகைகளுக்கு வலை விரித்த விபச்சார புரோக்கர் - சாதுரியமாக சிக்க வைத்த நடிகை
, வெள்ளி, 13 ஜூலை 2018 (12:00 IST)
வாட்ஸ் ஆப் மூலம் நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வலை வீசிய இரண்டு புரோக்கர்களை சீரியல் நடிகை ஜெயலட்சுமி சாதுரியமாக போலீஸாரிடம் சிக்க வைத்துள்ளார்.
சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் பல நடிகைகள் சினிமா துறையில் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளி உலகத்திற்கு சொல்லி வருகின்றனர்.
 
சமீபத்தில் கூட தெலுங்கு நடிகைகளை மூளைச்சலவை செய்து, புரோக்கர் ஒருவன் அமெரிக்காவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக கைது செய்யப்பட்டான்.
 
இந்நிலையில் சென்னையில் புரோக்கர் கும்பல் ஒன்று நடிகைகளுக்கு, வாட்ஸ் ஆப் மூலம் கொச்சையான மெசேஜ்களை அனுப்பி வந்தன. அதில் தாங்கள் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அரசியல் பிரமுகர்கள், விஐபி, விவிஐபியுடன் நீங்கள் ரிலேஷன்ஷிப் வைத்துக் கொண்டால் சுலபமாக 30000 ரூபாயிலிருந்து 3 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என பல நடிகைகளுக்கு வலை வீசியுள்ளன.
webdunia
இந்த மெசேஜை அந்த புரோக்கர் கும்பல் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமிக்கு அனுப்பியுள்ளது. ஜெயலட்சுமி இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
 
அந்த அயோக்கியன்களை ஜெயலட்சுமியின் மூலமே பிடிக்க ஸ்கெட்ச் போட்ட போலீஸார், ஜெயலட்சுமியின் வாட்ஸ் ஆப் எண் மூலம் அவர்களை அண்ணா நகரில் உள்ள காபி ஷாப்பிற்கு வரவழைத்தனர். அங்கு மறைந்திருந்த போலீஸார், இரண்டு புரோக்கர்களை அதிரடியாக கைது செய்தனர். இதுவரை எந்தெந்த நடிகைகளை இவர்கள் பாலியல் தொழிலிற்கு தள்ளியிருக்கிறார்கள் என்றும் இதில் யாரேனும் பெரிய நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட பேய் படத்தில் மொட்டை ராஜேந்திரன்