Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது சண்டக்கோழி-2 டிரெய்லர்

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (17:24 IST)
விஷால், கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் தயாராகி இருக்கும் சண்டக்கோழி 2 படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது.

விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 13 வருடங்களுக்கு முன்பு வெளியான சண்டக்கோழி  திரைப்படம் வசூலில் சாதனை புரிந்தது. விஷாலின் இரண்டாவது படமான அப்படம் அவரை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது. தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகி அடுத்த மாதம் ஆயுத பூஜை வெளியீடாக வரவுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. முதல் பாகம் போலவே இந்த பாகமும் கிராமத்தை மையமாகக் கொண்டு ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது.

இரும்புத்திரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருப்பதால் இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்கு உரிமை மட்டும் 21 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அஞ்சான் தோல்விக்கு பிறகு லிங்குசாமி மூன்று வருடங்களுக்குப் பிறகு இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் ஒரு முக்கியமான வில்லிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments