Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

VJS –பூரி ஜெகன்னாத் இணையும் பேன் இந்தியா படத்தின் கதாநாயகி இவர்தான்!

Advertiesment
பூரி ஜெகன்னாத்

vinoth

, செவ்வாய், 17 ஜூன் 2025 (11:32 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பூரி ஜெகன்னாத். அவரின் பல ஹிட் படங்கள் தமிழிலேயே ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. எம் குமரன் படமெல்லாம் அவர் இயக்கிய படத்தின் ரீமேக்தான். ஆனால் தற்போது அவர் ஒரு பின்னடைவில் உள்ளார்.

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவான லைகா திரைப்படம் பேன் இந்தியா ரிலீஸாக வந்தது. ஆனால் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக அவரின் அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல் உருவானது. இந்நிலையில் தற்போது அவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு பேன் இந்தியா படத்தை இயக்கி, தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கை ஜூனில் அவர் தொடங்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சம்யுக்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மலையாளத்தைச் சேர்ந்தவரான இவர் ஏற்கனவே தனுஷின் ‘வாத்தி’ படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானவர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிடி ரிலீஸுக்குப் பின்னும் 85 திரைகளில் வெற்றிகரமாக ஓடும் டூரிஸ்ட் பேமிலி!