பிரபல நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிக்பாஸ் சம்யுக்தா நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா என்பதும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் அட்டகாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அவரது பதிவுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது
சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சம்யுக்தா, சசிகுமாருக்கு ஜோடியாக நடிப்பதாக தெரியவில்லை என்றாலும் இந்த படத்தின் முதுகெலும்பு உள்ள ஒரு கேரக்டரில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் சம்யுக்தா, சசிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹேமந்த் என்பவரின் இயக்கத்தில் டி இமான் இசையில் உருவாகியிருக்கும் இந்த திரைப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் இந்நிறுவனத்தின் ஐந்தாவது திரைப்படம் இரு என்பதும் குறிப்பிடத்தக்க
இந்த படத்தின் படப்பிடிப்பு 20 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளதாகவும் அதன் பின் ஹைதராபாத் பெங்களூர் ஆகிய பகுதிகளில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது