Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்க்கஸ் வித்தை செய்ய பயிற்சி எடுக்கிறியா...? கோமாளி நடிகையின் நெத்தியடி பதில்

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (15:06 IST)
ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

இந்நிலையில் சமீபநாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, டான்ஸ் வீடியோ , யோகா வீடியோ என தொடர்ந்து தனது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றிற்கு இணையவாசி ஒருவர் " பட வாய்ப்புகள் இல்லாததால் இப்படி சர்க்கஸ் செய்து ப்ராக்டிஸ் செய்கிறீர்களா" என கிண்டலடித்தார்.

அவருக்கு பதிலளித்த சம்யுக்த ஹெக்டே, "சர்க்கஸில் வேலை பார்ப்பது கேவலம் இல்லை அவர்கள் குடும்பங்களை விட்டு விட்டு மக்களை சந்தோச படுத்த தங்களால் முடிந்ததை செய்து வருகின்றனர்.அது உங்களை போன்ற நபர்களுக்கு எப்படி புரியும் என்று தக்க பதிலடித்து கொடுத்து அனைவரின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

ஊட்டி, கொடைக்கானல், இ-பாஸ், கூட்டம்..! நிம்மதியான சுற்றுலாவுக்கு அமைதியான மலை பகுதிகள்!

முதல் நாள் வசூல்.. மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

சல்மான் கானை வைத்து படம் எடுப்பது கஷ்டம்… சிக்கிக்கொண்ட முருகதாஸ்- பிரபல தயாரிப்பாளர் கருத்து!

அடுத்த கட்டுரையில்