Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் படம் உளவியல் ரீதியாக மாற்றத்தை உருவாக்கும்… சமுத்திரக்கனி நம்பிக்கை!

என் படம் உளவியல் ரீதியாக மாற்றத்தை உருவாக்கும்… சமுத்திரக்கனி நம்பிக்கை!
, செவ்வாய், 12 அக்டோபர் 2021 (16:21 IST)
சமுத்திரக்கனி இப்போது பிஸியான நடிகராகி விட்டார். ஆனாலும் இடையில் படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில் ஜி 5 ஓடிடி தளத்துக்காக அவர் இயக்கியுள்ள படம்தான் விநோயத சித்தம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா மற்றும் இயக்குனர் பாலாஜி மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் அக்டோபர் 13 ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு ஜி 5 தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி ‘நான் 15 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த ஒரு மேடை நாடகத்தை இப்போது படமாக்கியுள்ளேன். இந்த படம் உளவியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிகில், மாஸ்டர் பட விநியோகிஸ்தர் மாரடைப்பால் மரணம்!