Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயின் மாரை அறுத்து எப்படி சாப்பிட முடியும்… வணங்கான் விழாவில் சூர்யாவுக்காக கொந்தளித்த சசிகுமார்!

vinoth
வியாழன், 19 டிசம்பர் 2024 (09:41 IST)
இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தின் இசை வெளியீடும், அவரின் 25 ஆண்டுகால திரைவாழ்க்கையைக் கொண்டாடும் நிகழ்வும் நேற்று சென்னையில் நடந்தது. இதில் சூர்யா, மணிரத்னம், மிஷ்கின் மற்றும் பாக்யராஜ் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினார்.

இந்த படத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனி பேசும்போது வணங்கான் படத்தைப் பற்றி பேசுவதை விடுத்து சூர்யாவின் கங்குவா பற்றி பேசி கொந்தளிக்க ஆரம்பித்தார். அவரது பேச்சியில் “குழந்தைக்கு பால் கொடுத்து பசியை ஆற்றுவதே தாய்தான். அவளின் மாரை அறுத்து எப்படி சாப்பிடமுடியும். அதுபோலதான் சிலர் சினிமாவை நம்பி பிழைப்பு நடத்தும் சிலர் கங்குவா படத்தையும் தம்பி சூர்யாவையும் கடுமையாக விமர்சித்து அந்த பணத்தில் எப்படிதான் சாப்பிடுகிறார்களோ எனத் தெரியவில்லை.

 சூர்யா சாதாரணமான ஆள் இல்லை. ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வருவான். அவன் செய்த நன்மைகளை எல்லாம் மறந்துவிட்டு எப்படிதான் அப்படிப் பேசத் தோன்றுகிறதோ எனத் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆகாஷ் முரளி & அதிதி நடிப்பில் உருவாகும் ‘நேசிப்பாயா’ பட ரிலீஸ் எப்போது?

அமரனுக்கு நம்பிக்கை கொடுத்த பிதாமகன்… பாலா 25 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

இந்தியில் மட்டும் 600 கோடி ரூபாய் வசூல்… அனைத்து சாதனைகளையும் உடைத்த புஷ்பா 2!

பாலா நிறைய படம் பண்ணுங்க… வணங்கான் மேடையில் மணிரத்னத்தின் அட்வைஸ்!

எல்லாத்துக்கும் காரணம் பாலா அண்ணன்தான்… வணங்கான் மேடையில் சூர்யா நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments