Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகாஷ் முரளி & அதிதி நடிப்பில் உருவாகும் ‘நேசிப்பாயா’ பட ரிலீஸ் எப்போது?

vinoth
வியாழன், 19 டிசம்பர் 2024 (09:18 IST)
XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், பில்லா புகழ் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி(அதர்வாவின் தம்பி), அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது.

இந்த படம் மூலம் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு விஷ்ணுவர்தன் தமிழில் படம் இயக்குகிறார். தலைப்பை பார்க்கும் விஷ்ணுவர்தன் இயக்கிய சர்வம் போல இதுவொரு ஃபீல்குட் காதல் படமாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்த படம் நீண்டகாலமாக உருவாக்கத்தில் இருந்த நிலையில் தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் படத்தை ஜனவரி 24 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே தேதியில்தான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ திரைப்படமும் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் கூட பழகியவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும்… பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்!

நீண்ட இடைவெளிக்குப் பின் தொடங்கும் விஷாலின் அடுத்த படம்!

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments