Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்மாவிற்கு உதவியாக வீட்டை துடைக்கும் நைரா - super funny வீடியோ!

Advertiesment
அம்மாவிற்கு உதவியாக வீட்டை துடைக்கும் நைரா - super funny வீடியோ!
, திங்கள், 18 மே 2020 (12:24 IST)
1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரீட்சியமானார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.

பிறகு திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். அதையடுத்து நைரா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைகளுடன் முழு நேரத்தை செலவிட்டு வரும் சமீரா ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது அவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார். அந்தவகையில் தற்போது தனது செல்ல மகள் நைரா லாக்டவுனில் தனது அம்மாவிற்கு உதவியாக வீட்டை சுத்தம் செய்யும் funny வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். சமீபகாலமாகவே நைரா அனைவரது ஃபேவரைட் பேபியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A cleaning baby?


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் பட பிகில் பாண்டியம்மாவிற்கு வீடியோ காலில் வாழ்த்து!