மீண்டும் காதலில் விழுந்தாரா சமந்தா?.. சர்ச்சையைக் கிளப்பிய புகைப்படம்!

vinoth
சனி, 17 மே 2025 (09:36 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.  தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளில் விவாகரத்துப் பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை.

சமீபகாலமாக அவர் நடித்த ‘குஷி’ மற்றும் ‘சகுந்தலம்’ ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர்.  தாய்மொழியான தமிழில் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு பிறகு வேறு எந்த புதிய படத்திலும் அவர் கமிட்டாகவில்லை. தற்போது டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தா பேமிலி மேன் மற்றும் சிட்டாடல் போன்ற சீரிஸ்களை இயக்கிய இயக்குனர்களில் ஒருவரான ராஜை காதலிப்பதாக சில மாதங்களாக தகவல்கள் பரவி வந்தன. இப்போது இதை உறுதிபடுத்துவது சமந்தா ராஜுடன் தோளில் சாய்ந்திருப்பது போல புகைப்படத்தை வெளியிட மீண்டும் அது பற்றிய விவாதங்கள் கிளம்பத் தொடங்கியுள்ளன. ஆனால் இது சம்மந்தமாக சமந்தாவின் தரப்பு அந்த வதந்திகளில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘சூர்யா 46’ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை!

50 கோடி ரூபாய் மைல்கல்லைத் தொட்ட மாரி செல்வராஜ் &துருவ் விக்ரம்மின் ‘பைசன்’!

சூர்யாவின் ‘கருப்பு’ பட வியாபாரம் தொடங்கியது… வெளிநாட்டு உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்!

விஜய் சேதுபதி நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் சூர்யா…!

இப்பதான் என்னை ஒரு மனிதனாகவே உணர்கிறேன்! - மனம் திறந்த கங்குவா வில்லன் நடிகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments