ஓடிடி நிறுவனங்கள் சினிமாவை உருவாக்கவில்லை… வெறும் கண்டெண்ட்தான் – அனுராக் காஷ்யப் கோபம்!

vinoth
சனி, 17 மே 2025 (09:26 IST)
சமீபகாலமாக அவரின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. அதனால் இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் தமிழில் விஜய்யின் லியோ படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். விரைவில் வெளியாக இருக்கும் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதையடுத்து தென்னிந்தியாவில் நடிகராக அவருக்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன.

இந்நிலையில் அவர் சமீபத்தில் ஓடிடி நிறுவனங்கள் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “நாங்கள் ஆரம்பத்தில் சேக்ரட் கேம்ஸ் மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற சீரிஸ்களை நெட்பிளிக்ஸ்க்காக உருவாக்கினோம். ஓடிடிகளை நாங்கள் ஒரு நல்ல வாய்ப்பு எனக் கருதினோம். ஆனால் கோவிட்டுக்குப் பிறகு எல்லாமே மாறிவிட்டது.  அவர்கள் இப்போது தொலைக்காட்சியை விட மோசமாகிவிட்டார்கள்.

நெட்பிளிக்ஸ், அமேசான் என எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு இப்போது இந்தியாவில் தேவைப்படும் ‘டேட்டா’. 1.4 பில்லியன் மக்கள் தொகை உள்ள நாட்டில் அவர்கள் தங்கள் சந்தாதாரர்களை அதிகப்படுத்தவே விரும்புகிறார்கள். அவர்கள் தற்போது சினிமாவை உருவாக்குவதில்லை. அவர்கள் உருவாக்குவதெல்லாம் வெறும் கண்டெண்ட்தான். ” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments