லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
காலையில் நயன்தாராவின் காதலரான விக்னேஷ் அவரைப் வாழ்த்திப் பாராட்டிய டுவீட் பரவலான கவனத்தைப் பெற்றிருந்த நிலையில், தற்போது நடிகை சமந்தா, நயன் தாராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
அதில், நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும் பிரகாசமான வளருங்கள் வளர்ந்து எங்களுக்கு முன்மாதிரியாக இருங்கள். மேலும் உங்களுக்கு வலுமை பெருகட்டும். உங்களின் வலிமைக்கும் அமைதியான உறுதிக்கு, சல்யூட் என்று பாராட்டியுள்ளார்.
ஒரே துறையில் இருந்தாலும் சக நடிகைக்கு மனம் திறந்து பாராட்டியுள்ள சமந்தாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.