Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஹிட் பட இயக்குனரிடம் பேசிய விஜய்! பின்னணி என்ன?

Advertiesment
20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஹிட் பட இயக்குனரிடம் பேசிய விஜய்! பின்னணி என்ன?
, புதன், 18 நவம்பர் 2020 (11:03 IST)
நடிகர் விஜய் தனது அடுத்த படத்துக்காக இயக்குனர் மற்றும் நடிகர் எஸ் ஜே சூர்யாவிடம் ஒரு கதை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து ஏ ஆர் முருகதாஸ் விலகியதை அடுத்து அந்த படத்தை இயக்க பல இயக்குனர்களும் போட்டி போட்டனர். இப்போது கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் அந்த படத்தை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் 66 ஆவது படத்தை இயக்குவதற்காக விஜய்யே இயக்குனர் எஸ் ஜே சூர்யாவிடம் ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் இணைந்து உருவாக்கிய குஷி திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் எஸ் ஜே சூர்யா இப்போது நடிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்தி வருவதால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூக்குத்தி அம்மன் வெற்றியால் நயன்தாரா எடுத்த முடிவு ! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்!