தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் ரக்த் பிரம்மாண்ட் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை.
இது தவிர அவர் கைவசம் படங்கள் எதுவும் இப்போது இல்லை. சமீபகாலமாக அவர் நடித்த குஷி மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அவர்களின் விவாகரத்துக்கு பிறகு சமந்தா படங்களில் நடிப்பதை பெருமளவுக் குறைத்துக்கொண்டுள்ளார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு பிறகு வேறு எந்த புதிய படத்திலும் அவர் கமிட்டாகவில்லை.
சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கிவரும் சமந்தா சமீபத்தில் “நான் சமீபத்தில் மூன்று நாட்கள் என் மொபைல் போனைப் பயன்படுத்தவில்லை. இணைய வசதியையும் பயன்படுத்தவில்லை. தனிமையில் என்னோடு மட்டும் இருந்தேன். இது பயங்கரமானதாக இருந்தது. ஆனாலும் இந்த மௌனம் எனக்குப் பிடித்திருக்கிறது” எனக் கூறியுள்ளார்.