Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏன் நான் ஒரு குற்றவாளி போல நடத்தப்படுகிறேன்.. விவாகரத்து சம்மந்தமாக நாக சைதன்யா அதிருப்தி!

Advertiesment
ஏன் நான் ஒரு குற்றவாளி போல நடத்தப்படுகிறேன்.. விவாகரத்து சம்மந்தமாக நாக சைதன்யா அதிருப்தி!

vinoth

, சனி, 8 பிப்ரவரி 2025 (12:28 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா 2021 ஆம் ஆண்டு அவரது காதல் கணவரான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அது சம்மந்தமான பரபரப்புகள் இப்போதுதான் சற்றுத் தணிந்துள்ள நிலையில் இருவரும் தங்கள் தொழிலில் பிஸியாக உள்ளனர்.

இதற்கிடையில் நாக சைதன்யா சக நடிகையான சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொண்டார். அதே போல சமந்தா பேமிலி மேன் சீரிஸின் இயக்குனர் ராஜ் என்பவரை டேட் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னமும் ரசிகர்களும் ஊடகங்களும் அவர்களிடம்  விவாகரத்துக் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து பேசியுள்ள நாக சைதன்யா “நாங்கள் இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக பிரியவேண்டும் என நினைத்தோம். பிரிந்தோம். இதற்கு மேல் இதில் என்ன விளக்கம் சொல்லவேண்டும். விவாகரத்து என்பது எங்கள் இருவர் வாழ்க்கையில் மட்டும் நடப்பதில்லை. ஆனால் ஏன் என்னை ஒரு குற்றவாளியைப் போல நடத்துகிறார்கள்?” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைவிடப்பட்டதா விஜய் சேதுபதி & இயக்குனர் ஹரி படம்?