Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அத மட்டும் ஒரு நாளும் செய்யமாட்டேன்…. டாட்டூ குறித்து பேசிய சமந்தா!

Advertiesment
அத மட்டும் ஒரு நாளும் செய்யமாட்டேன்…. டாட்டூ குறித்து பேசிய சமந்தா!
, திங்கள், 18 ஏப்ரல் 2022 (09:35 IST)
நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த உரையாடல் நிகழ்ச்சி கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரின் ரசிகர்களும் மாறி மாறி மற்றவர்களை குற்றம் சொல்லிக் கொண்டு வந்தனர். ஆனால் சமந்தா இதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கூலாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதையடுத்டு தற்போது அவர் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் யசோதா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட “என்றாவது ஒரு நாள் நீங்கள் டாட்டூ இட்டுக்கொள்ள வேண்டும் என நினைத்ததுண்டா?” என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் ‘நான் எப்போதும் என்றைக்கும் என் உடலில் டாட்டூ போட்டுக்கொள்ள மாட்டேன்” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் முதல் சம்பளம் இவ்ளோதான்… ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் பதில்!