Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் முதல் சம்பளம் இவ்ளோதான்… ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் பதில்!

என் முதல் சம்பளம் இவ்ளோதான்… ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் பதில்!
, திங்கள், 18 ஏப்ரல் 2022 (09:28 IST)
நடிகை சமந்தா சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரின் ரசிகர்களும் மாறி மாறி மற்றவர்களை குற்றம் சொல்லிக் கொண்டு வந்தனர். ஆனால் சமந்தா இதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கூலாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதுபோலவே சமுகவலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களிடம் தொடர்பில் இருந்தவண்ணம் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர் “உங்களின் முதல் சம்பளம் எவ்வளவு” என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சமந்தா ‘என்னுடைய முதல் சம்பளம் 500 ரூபாய்.  நான் ஒரு ஹோட்டலில் நடந்த கான்பரன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். 8 மணி நேர வேலைக்கு 500 ரூபாய் சம்பளம் வாங்கினேன்” எனக் கூறியுள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"Sing In The Rain": 20 வருடங்களுக்கு பின் பிரபுதேவா-வடிவேலு சந்திப்பு!