ஐதாராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நாகார்ஜுனாவிடம், நாகசைதன்யா திருமணம் எப்போது நடைபெறும்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
வரும் டிசம்பர் மாதம் சமந்தா - நாக சைதன்யா திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாக ஆந்திராவிலிருந்து வந்த செய்திகள் வந்தன.
இந்நிலையில் சமந்தா - நாக சைதன்யா காதலிப்பது குறித்து நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுன் இதுவரை கருத்து எதுவும் கூறாமலிருந்த நிலையில் இப்போது கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதற்கு பதில் அளித்த அவர், “திருமண தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரைவில் அறிவிப்பேன்” என்று கூறினார். இந்த வருடம் இறுதியில் சமந்தா-நாகசைதன்யா நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் அடுத்த வருடம் திருமணம் நடக்கும் என்றும் தெலுங்கு பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது.
திருமணத்துக்கு பிறகு சமந்தா சினிமாவை விட்டு விலகுவார் என்றும் கூறப்படுகிறது.