Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியன் 2 ஷூட்டிங்கில் ஷங்கரோடு பிரபல நடிகர்!

இந்தியன் 2 ஷூட்டிங்கில் ஷங்கரோடு பிரபல நடிகர்!
, புதன், 5 ஏப்ரல் 2023 (14:23 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இப்போது இந்தியன் 2 ஷூட்டிங் சென்னையில் நடந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட ஒருமாதம் இங்கு ஷூட்டிங் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஷூட்டிங் நிறைவடையும் போது கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் முழுவதும் இந்தியாவில் இந்த பட ஷூட்டிங் நடந்த நிலையில் இப்போது அடுத்த கட்ட ஷூட்டிங்குக்காக படக்குழு தைவான் நாட்டில் முகாமிட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களில் ஒருவரான, காளிதாஸ் ஜெயராம் தைவான் நாட்டில் நடக்கும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கஜோலுக்கு இவ்ளோ பெரிய பொண்ணா?.. இணையத்தில் வைரல் ஆகும் போட்டோஷூட்!