சினிமாவிற்கு குட்பை சொன்ன சமந்தா?

சனி, 7 ஜூலை 2018 (16:33 IST)
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். 
 
திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை ஆகிய படங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், யூ-டர்ன் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் அனைத்து படங்களையும் முடித்துவிட்டு சினிமாவில் இருந்து ஒதுங்க சமந்தா முடிவெடுத்துள்ளார் என்று தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
திருமணத்திற்கு முன்னர் இவரது கணவர் குடும்பத்தின் சினிமாவில் நடிக்க அனுமதித்த நிலையில், தற்போது எந்த காரணத்திற்காக இந்த முடிவு எடுத்துள்ளார் என தெரியவில்லை. இந்த தகவலில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது சமந்தா கூறினால் மட்டுமே தெரியும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இன்று அகம் டிவி வழியாக போட்டியாளர்களுடன் கமல்; பிக்பாஸ் வீடியோ!