Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று அகம் டிவி வழியாக போட்டியாளர்களுடன் கமல்; பிக்பாஸ் வீடியோ!

Advertiesment
இன்று அகம் டிவி வழியாக போட்டியாளர்களுடன் கமல்; பிக்பாஸ் வீடியோ!
, சனி, 7 ஜூலை 2018 (16:16 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் சனி, ஞாயிற்று கிழமைகளில் கமல் பேசுவது வழக்கம். அதேபோல் இன்று நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு அகம் டிவி வழியாக போட்டியாளர்களுடன் பேசுவார்.
அதில் அந்த வாரத்தில் நடந்த சர்ச்சைகள் குறித்து எந்த பாரபச்சம் பார்க்காமல், பொதுவாக நின்று பிரச்சனைகள் பற்றி பேசி தீர்வு தருவார். மேலும் வாரம் ஒரு  பிக்பாஸ் பிரபலம் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார். வாரம் ஒரு புது தலைவரும் தேர்ந்தெடுப்படுவார்.
 
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு புரோமோவில், நடிகர் கமல்ஹாசன் “வானத்து வின்மீன்னவருக்கு வன் தூண்டிலிட்ட வகையர் போல்...  போனதை எண்ணி புலம்புகின்றனை” என கூறுகிறார். மேலும் அதற்கான அர்த்தத்தையும் விளக்குகிறார்.
 
இழந்ததையே நினைத்து அழுதுக் கொண்டு இருந்தோம் என்றால் இருப்பதை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போய்விடும். இருப்பதை தக்க வைத்துக் கொள்ள போகிறார்களா..? அல்லது தவற விட போகிறார்களா...? என ஒரு புதிரோடு பேசியுள்ளார். பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் பிக்பாஸ் வீட்டில் என்ன  நடக்கப்போகிறது என்று...?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரீரெட்டி லிஸ்டில் பிரபல தமிழ் இயக்குநர்