நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் வாழ்ந்த ஹைதராபாத் வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார்.
டோலிவுட்டை தாண்டி ஃபேமிலி மேன் 2 என்ற வெப் தொடரில் நடித்தவுடன் சமந்தா எதே ஒரு காரணத்திற்காக எப்போதும் மீடியாவில் முக்கிய செய்தியாக உள்ளார். அவரது கணவர் நடிகர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து அறிவித்த போதும் அதன் பின்னரும், ஓ அந்தவா மாமா பாடலில் இடம் பெற்றதும் என சமந்தா ஒரு பேசு பொருளாகவே இருந்து வருகிறார்.
தற்போது சமந்தா செய்திகளில் இடம் பெற காரணமாக இருப்பது நாக சைதன்யாவுடன் பிரிவுக்கு முன்னர் வாழ்ந்த வீட்டை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதால்.
மூத்த தெலுங்கு நடிகரும், ரியல் எஸ்டேட்டருமான முரளி மோகன், திருமணத்திற்குப் பிறகு இருவரும் தங்கியிருந்த ஹைதராபாத் வீட்டை வாங்குவதில் சமந்தா பிடிவாதமாக இருந்தார் என தெரிவித்துள்ளார்.
இந்த அபார்ட்மெண்ட் தனக்கு மிகவும் பொருத்தமானது என்று உணர்ந்த சமந்தா அதிக விலைக்கு வாங்கியதாகவும் தற்போது சமந்தாவும் அவரது தாயும் அந்த வீட்டில் தங்கியிருப்பதாகவும் கூறினார்.