Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உணர்வுகளை காயப்படுத்திட்டேன்.. மன்னிச்சிடுங்க! – பேமிலிமேனால் நொந்த சமந்தா!

Advertiesment
Cinema
, வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (12:37 IST)
சர்ச்சைக்குரிய ஃபேமிலிமேன் தொடரில் நடித்து மக்களை புண்படுத்தியதற்கு நடிகை சமந்தா மன்னிப்பு கேட்டுள்ளார்!

சமந்தா நடித்த ஃபேமிலிமேன் என்ற இணைய தொடரின் இரண்டாவது சீசன் சில மாதங்கள் முன்னதாக அமேசான் ப்ரைமில் வெளியானது. இந்த தொடரில் ஈழத்தமிழர்களையும், தமிழகத்தையும் தவறாக சித்தரித்துள்ளதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அதையும் மீறி ஃபேமிலிமேன் தொடர் வெளியானது.மிகவும் சர்ச்சைக்குள்ளான இந்த தொடர் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை சமந்தா “நான் மக்கள் அவர்கள் கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். இந்த தொடர் வெளியாவதற்கு முன்னால் மக்களிடையே கண்டன குரல்கள் எழுந்திருந்தாலும், தொடரை பார்த்த பின் அவர்கள் எண்ணம் மாறலாம் என நம்பினேன். ஆனால் இன்று வரை அது அவர்களை காயப்படுத்தி வருவதை நினைக்கையில் உண்மையாகவே இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த கதாப்பாத்திரத்தில் நான் நடிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாத்தியாரே இதான் ட்விட்டரு.. ரத்த பூமி இது! – பசுபதியை ட்விட்டருக்கு வரவேற்ற ஆர்யா!