விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் முதல் முறையாக ஒரே நேரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வி.ஜே. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், துஷார் உள்ளிட்ட 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில், ஏற்கனவே நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, கலையரசன், ஆதிரை ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
சமூக ஊடக பிரபலங்கள் அதிகம் இருந்ததால் நிகழ்ச்சி சலிப்படைவதாகக்கருத்து நிலவியது. அதை சரிசெய்ய, பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் என நான்கு டிவி பிரபலங்கள் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் உள்ளே அனுப்பப்பட்டனர். இதனால் வீடு பரபரப்பானது.
வழக்கம் போல் வார இறுதியில் விஜய் சேதுபதி கலந்துகொள்ளும் வெளியேற்ற சுற்றில், கெமி, ரம்யா, சபரி, பிரவீன், துஷார், எஃப்.ஜே. ஆகியோர் நாமினேஷனில் இருந்தனர். ரசிகர்களின் வாக்குகள் அடிப்படையில், இந்த சீசனின் முதல் டபுள் எவிக்ஷனில் துஷார் மற்றும் பிரவீன் ஆகியோர் வெளியேறியுள்ளனர் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துஷார் முதல் வாரத்திலேயே கேப்டன் பொறுப்பை இழந்தவர். பிரவீன் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் வெளியேறி இருப்பது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த எவிக்ஷன் எபிசோடு நாளை ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.